அந்நிழல்.

ஓர் நிழல்
தன்னை உற்று நோக்கி
கொண்டிருக்கிறது.
எதன் தொன்மையின்
எச்சங்கள் அவை
அதற்கென்று பல்நிலை 
தன்மையின் உலகங்கள்
இயங்கி கொண்டிருக்கிறது .


வேரூன்றி உலவும்  நிழலில்
என்னை ஆட் கொண்டிருக்கிறது
காலத்தின் அசைவு
அதன் கனவுகளாக என்னிடமே
உலவுகிறது அந்நிழல் .


இரவென்றும் பகலென்றும்
ஏதும் பொருட்படுத்தாமல்
தன்னை நோக்கியே
வந்து கொண்டிருக்கிறது
அந்நிழல் .
அதனிடம் எதையாவது பகிர்வதற்கு
எண்ணற்ற மன அடுக்குகள்
நிறைந்து வைத்திருக்கிறது காலம் .

நிழல் என்னிடம் ஏதும்
கூறுவதில்லை
அதன் இருப்பில் மட்டுமே
இயங்கி கொண்டிருக்கிறது .
அனைத்தின் கற்பனையின் ஆதியை
மட்டுமே வழங்கி கொண்டிருக்கிறது .

நினைவிற்கும் உண்டோ
காலத்தின் நிழல்
அவை தன்னின்  ஒளியின்
கருவியாக்கி விட்டிருக்கிறது .

                           -வளத்தூர் தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை