இருந்திருந்தால்


ஆண்டுகளின் துணையை
ஆறுதலாகும் பிரிவு 
கடந்து போகும் 
மயக்கத்தை ஏற்படுத்த 
அடுத்த ஆண்டின் 
நுழைவின் கணம்
வீட்டின் புதிய வரவால் 
மனதை இலகுவாக்கிறது .

கனிந்த நினைவை
உனதாக்கிய நிறைவு 
வழிந்தோடும் நேசங்களை 
கோர்க்கப்படுகிறது 
இச்சமயம் .

நீயாகவே இருத்தலின் 
உறுதியை 
அண்ணன் அண்ணி 
மூலமாகவே 
நியாயப்படுத்த 
அன்பினை எங்கும் 
பரவிட அகமெங்கும் 
இனிக்கிறது இக்கணமே .

நீ இருந்திருந்தால் என்பதை 
இல்லாமையால் கூறுவதை 
என் நம்பிக்கையின் 
சாரமாகவே கொள்கிறேன் 
வளர்கின்ற நேசத்தில் 
மெய்ப்பிக்கிறது
உன் மறு வருகை .

அரிதொரு பிணைப்பை 
உணர்தல் இரவென்றும் 
பாராமல் நினைவை மீட்ட 
இசையாய் ஒலிக்கிறது 
என் கனவில் .
                        தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு