தாங்கல் தெரு


தாங்கல் தெரு எங்கள் ஊரில் அதிக அதிகாரம் படைத்த தெரு 
(இன்று இல்லை ).வேலூர் மவாட்டத்தில் குடியாத்தம் தாலுக்காவில் வளத்தூர் கிராமத்தில் இருக்கின்ற தெரு தான் தாங்கல் தெரு .என் வீடும் இந்த தெருவில் தான் உள்ளது ..எதற்காக இந்த பெயர் என்று யோசிக்கையில் இதன் வரலாறு இடப்பெயர்ச்சியில் தொடங்குகிறது தாங்கல் என்ற ஊரில் என் முன்னோர்கள் வாழ்ந்த வந்தனர் அங்கு இருந்து இடம் பெயர்ந்து வளத்தூர் என்ற கிராமத்தில் கடைசியாக வந்தடைந்து அமைந்த பகுதி தான் தாங்கல் தெருவானது என செவி வழி செய்தியாக தலைமுறையாக எங்களுக்கு சொல்லி வந்தனர் ..இந்த தாங்கல் என்ற ஊர் இப்பொழுது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என் ஆயா சொன்னது ஆந்திராவுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் ஒரு கிராமமாக இருந்திருக்கும் என்று ..இதை அறிவதில் அதிக முனைப்போடு எப்பொழுதும்  இருப்பது என் அண்ணன் தி .கார்த்தி மட்டுமே. 
இந்த தெருவில் மொத்தம் இப்பொழுது பதினொன்று வீடு மட்டுமே உள்ளன இவற்றில் வசிப்பவர்கள் அனைவரும் உறவினர்களே 
இந்த தெருவில் என் குழந்தை பருவத்தை மீண்டும் தேடுகிறேன் மீளா நினைவுகளின் உட்புகுதல் குழந்தை பருவங்களிலே தங்கி விடுகின்றன என்னை போல .
ஒவ்வொரு வீட்டிலும் சக வயது குழந்தை அதிகம் இருந்ததால் விளையாட்டிற்கும் சண்டைக்கும் பஞ்சம் இருந்ததில்லை சில உறவினர்கள் தெருவில் இடம் இல்லாததால் பக்கத்து தெருவில் குடி புகுந்தனர் அவர்களும் தாங்கல் தெருவை சார்ந்தவர்கள் ஆயினர் இது ஒரு பெருமைக்குரிய விஷயமாகவே இன்று வரை கருதப்படுகிறது .இன்று எங்கள் தெருவில் விளையாடிய குழந்தைகள் அனைவரும் நான் உட்பட எங்கு இருந்தாலும் அவர்கள் தாங்கல் தெருவை ஒரு பெருமையாகவே நினைக்கிறோம் ..பிறந்த ஊரில் வசிக்கும் தெரு நீண்ட தொரு வரலாறு உடையதாக அமைத்த தாங்கல் தெரு என்ற பெயர் எங்களுக்கு அமைந்ததில் மகிழ்ச்சி தருவதாகவே இருக்கிறது .ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும் பொழுது இழந்த குழந்தை பருவத்தை மீண்டும் தேடுகிறேன் .இன்றும் அங்கு விளையாடும் உறவினர்களின் குழந்தைகளை பார்க்கும் சந்தர்ப்பதில் என் வழி தவறிய நினைவை மீட்டு கொடுக்கிறது என் தாங்கல் தெரு .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு