கனவு

முடிவில்லாத மீண்டும் 
அதே கனவு நிலைகள்
தொடர்கின்றன ..


தினமும் என்னை 
காண்பதற்கு அச்சப்படுகிறேன் 
கனவின் விளைவுகளாய்..


கனவின் மீதங்கள் 
மறுநாளின் ஆதிக்கமாய் 
எங்கும் பரவி காணப்படுகிறது..


விடை தெரியாத 
என் குழந்தை பருவத்தின் 
தொலைத்த கனவுகளை 
மீட்கும் விதமாக 
மறுபடியும் இரவின் 
உறக்கதில் நான்.

-தி .ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை