அகாலத்தின் அழைப்பு .





கால வெளியின் ஓடத்தில்
பேருந்தின் முன் இருக்கையில்
ஓர் வயதுடைய குழந்தை
உயிர் ஊடுருவும் பார்வையை
எங்கள் மீது தொடர்ந்து
செலுத்துகிறது .
அவ்வன்பு
எங்களின் நெகிழ்தல் கொண்டு
அங்கும் இங்குமாக
அகத்தில் முந்துகிறது .
அக்கணம்
அகாலத்திலிருந்து
ஓர் குரல்
எங்களை அழைத்துக்கொண்டிருந்தது .


                                  உன் அன்பின் நிறை

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு