தன்னின் சில நொடிகள்

தன் மவுனம்
கால இடைவெளி இன்றி
ஒலித்து கொண்டிருக்கிறது.
அதனை கேட்பதற்கு சில
நுணுக்கங்களை விதைத்திருக்கிறது
மவுனத்தின் ஆதி.

தன் இருப்பின் அமைவு
ஒவ்வொன்றாக
பரிணாமம் அடைந்து கொண்டிருக்கிறது .

உன் சிறு சிறு மாறுதல்களில்
மாறுகிறேன் மாற்றங்களாய் .

தன்  வெளியின்
முடிவிலிகளை
உருவாக்கி கொண்டிருக்கிறது
காலம் .
            -வளத்தூர் தி .ராஜேஷ்

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு