மன நீர்மம்.

மன நீர்மம் உதிர்த்தலை 
கரையேற்றுவாய் நீயே 
என் தவிப்பினை அறிந்த 
எல்லாமுமான ஆயா
இந்த நிமிடம் வந்து செல். 
என் உயிர் கணம் 
அழுத்தி கொண்டிருக்கிறது.
மன தொலைவின் வழியெங்கும் 
நினைவுகளே ஆக்கிரமிக்கிறது .
அதில் சில இரக்கமற்றதாக 
அமைந்து விடுகிறது .
காலமொன்றில் விடுவிக்கப்பட்ட 
இயக்கம் தன் மாறுபாட்டின் 
பிரதிபலிப்பு அல்ல .

என் மன பகிர்வு அனைத்தும் 
உறைந்து விட்டிருக்கிறது 
மெல்ல மெல்ல கசியும் 
எண்ணங்களை உன்னிடமே 
சேர்த்து கொள் .
மன நீர்மம் உதிர்த்தலை 
கரையேற்றுவாய் நீயே .

அடுத்த வாரம் உன் 
அன்பின் எண்ணங்கள் 
நிறைவேற போகிறது 
நீ அருள்வாய் உன் 
விருப்பபடி ஆயா 
ஆண்டுகள் செல்வதை 
நம் பெருங்கனவு 
உணர்த்துகிறது .

உன் இயல்பை 
மகா விடம் 
காணுகிறேன் 
என்னை வழிநடத்த 
நீயே தேர்ந்தெடுத்தாய்.
நம் புரிதலை 
பிரபஞ்ச  இயக்கமாகவே 
உணர்கிறேன் .

அனைத்து உறவினர்களும் சூழ 
என் வாழ்வின் புதிய தொடக்கம் 
நுழைவில் உன் நினைவுகளே 
என்னை அமைதியாக்குகிறது .
என் மன நீர்மம் உதிர்த்தலை 
கரையேற்றுவாய் நீயே .

                           வளத்தூர் தி.ராஜேஷ் .




Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு