நம்பிக்கை .

இப்பொழுதைய என் இருப்பு 
பிரபஞ்சத்தில் 
எங்கோ ஒரு அணுவிலும் 
இருப்பதற்கான சாத்தியங்கள் 
அனைத்தும் இருக்கிறது 
நீங்கள் செய்ய வேண்டியது 
அதனை நம்புவது ஒன்றே .

நம்புவது என்பது 
நம்பிக்கையின் மீது 
அமர்த்திவைக்கப்பட்ட 
வைக்கப்படும் 
ஒன்றையோ 
பலவற்றையோ 
அல்லது 
இதுவரை தோன்றிய 
அனைத்துக்குமான 
நம்பிக்கையை குறிப்பது .
அப்படிப்பட்ட ஒன்று 
இருக்கவே செய்கிறது 
அதையும் நீங்கள் 
நம்பி தான் ஆக வேண்டும் .


என் வாழ்வு 
கொடுக்கப்பட்ட முறையினை 
சார்ந்தது அல்ல 
ஒரு இயக்கத்தால்  
அளிக்கப்பட்ட  
மற்றொரு இயக்கம் .
ஏற்று கொள்ளபட்ட
உண்மையை நம்புவது 
காரணமின்றி நிராகரிப்பது 
என் முறையானது அல்ல .

எதிர் வரும் இறுதி 
இன்றோ நாளையோ 
முடிவிலியாக 
இருக்க ஒன்றும் செய்ய 
போவதில்லை 
நான் நம்பும் நம்பிக்கையை 
நம்பவது ஒன்றே 
அனைத்துக்கும் சாத்தியப்படும் 
நம்பிக்கையாகிறது.

என் சில பகிர்வுகள் 
சுய மனதை ஒளித்துவைக்க 
பயன்படுகிறது .
அதுவும் 
நம்பிக்கையாக்கப்படுகிறது .
                                     வளத்தூர் .தி.ராஜேஷ் .
  





Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு