நிறைவுதன்மையற்ற பகிர்வு .





தவறுதலாக 
பின் தொடரும் 
ஒரு நிழலொன்று 
இந்த இரவில் 
என்னிடம் 
வந்தடைந்தது .

என்னுடையது அல்ல 
இருந்தும் 
யாவற்றையும் நேசிப்பதால் 
அவை மேலும் சில 
நிமடங்கள் 
தன்னை 
ஆசுவாசப்படுத்த 
நீள்கின்ற மவுன 
அசைவுகள் சற்று 
அமைதியாகியது.

நீடிக்கின்ற என் இரவில் 
வந்திருக்கும் 
நிழல் ஒளியில் 
பகிர 
நிறைவுதன்மையற்ற 
காரணங்கள் இருந்தும்
கடக்கிறது 
நொடிகளின் இயக்கம் .

விடியலின் தொலைவு 
சற்று நெருங்குகிறது 
காலம் கரைந்ததில் 
சொன்ன ஒரே பதில் 
நீ.......... நான் .

மூன்று காலங்கள் 
கடந்து வந்திருக்கும் 
தவறுதலான 
நிழலொன்று இன்று 
நானானேன் .

விடியலின் தேய்மானம் 
மெல்ல மெல்ல என் மீது 
படர தவறுதலான 
நிழலொன்று 
நிறைவுதன்மையற்ற பகிர்வை 
தன் சுய நிழலில் கலந்தது .
                                         -வளத்தூர் தி.ராஜேஷ் 







Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை