வார்த்தையின் சற்று முன் நிலை .





இதுவரையிலும் உனக்கு 
சொல்லப்படாத வார்தையை 
என் மனதில் தேடிகொண்டிருக்கிறேன் 
அவை உனக்கு பல ரகசியங்களை 
சொல்ல கூடும் சற்று சந்தேகி .
சில பொய்மையும் அதன் கண்ணீரும் 
வடிந்தோடி கொண்டிருக்கும் 
அதில் சற்று மூழ்கி எழுந்து விடு .
அவைகளை ஒரு சொல்லாகவே
 நீ எதிர்கொள்ளவில்லை என்பதை 
சற்று நிம்மதி அளிக்கிறது .
வாழ்வியலின் அடிப்படை பதிவிறக்கம் போல 
உனக்கு சொல்லப்பட்டதை தகர்க்க செய்யும் 
வார்த்தையாய் அவைகளை மேலும் 
நம்பிக்கையாக்குகிறாய் .
கூடுமானவரை அந்த வார்தைகளை 
எந்த கணத்தில் உருவானதோ அதே நிலையில் 
அதே உயிர்ப்பில் உன்னிடமே வந்து சேர்க்கும் 
என் கட்டமைப்பின் மனதின் விதையில்
விதைக்கப்படுகிறது ,சொல்லப்பட்டிருக்கிறது.
இது வெறும் செய்தி மட்டுமல்ல உயிரின் பகிர்வு .
அன்பின் எண்ணங்களும் அதன் செயலும் 
வீற்றுக்கும் பிரதிபலிப்பை உன் இயல்பில் 
இருப்பதை உன் மவுனமும் புன்னகையும் 
சற்று காட்டி கொடுப்பதில் அந்த வார்தையின் 
பிரபஞ்ச பூரணத்துவமாய் முனைப்பாகிறது .
இனி வார்தைகளை வெறும் சொற்களால் ஆவதை 
சற்றும் உன்னால்  பொருத்து கொள்ள முடியாது .

                                                               - தி .ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை