கருத்தின் வாழ்த்துகள்





தன்னை  ஏற்றுகொள்ளும் ஒரு கருத்தை 
இது வரை அறிந்திருக்கவில்லை காலம் 
அதன் மாற்றத்தில் ஒவ்வொன்றும் 
ஒவ்வொரு நிலையை அடைந்திருக்க
நூற்றாண்டின் விளைவை உயிரினத்தில்  
புகுத்தும் உண்மையான ஒன்று இன்னும் 
உருவாகியிருக்கவில்லை .
கருத்தின் செறிவு தன் ஆளுமைக்கு 
உட்பட்டதாகவே இன்று வரையிலும் 
பின்பற்றப்படுகிறது .

நிர்பந்தம் ஏன் உங்களை சிந்திக்கவைக்கவில்லை 
ஒரு வேளை பின்பற்றபட்டவையே இறுதி என 
உங்களை நம்ப செய்யும் சூழ்ச்சியில்
 உறங்கி உறைந்து போய்விட்டிர்களா 
எதுவாயினும் நிகழ்த்தி கொண்டிருப்பவை 
உங்களால் நிர்ணியம் செய்ய கூடியவை அல்ல .

கருத்தில் உங்கள் சாதகங்களை முதலில் தேடுகிறிர்கள்
அவ்வாறு இல்லையெனில் எளிதாக புறகணிக்க முடிகிறது 
கருத்தின் நம்பிக்கை எதுவரை வரையறுக்கப்படுகிறது 
என சந்தேகம் உங்களுக்கு இது வரை வந்திருக்க வாய்ப்பில்லை .
ஒரு வேளை என் பிதற்றல் அறிந்திருக்குமோ என்னவோ 

எனக்கான கருத்தில் உங்களை நிச்சையமாக காண இயலாது 
அந்த கருத்தின் இயலாமையில் தொற்றி கொண்டிருக்கலாம் 
அப்பொழுதும் என்னால் உணரமட்டுமே முடியும் .
உங்கள் கருத்தை நீங்கள் அறிந்து கொள்ளும் முன் 
கருத்தின் தோற்றம் இறுதி நிலையை அடைந்திருக்கலாம்  
வாழ்த்துகள் .
                                               
                            -தி .ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை