நீடித்த பகற்பொழுதில் .







நீடித்த ஒரு பகற்பொழுதில் 
உங்களை நிலைகுலைய வைக்கும் 
சம்பவம் நடைபெறலாம் 
இல்லாமலும் போகலாம் 
எச்சரிக்கையாக இருப்பது 
தற்காத்து கொள்வதற்காக மட்டும் அல்ல 
நீடித்த பகல் உங்களால் சோதனையிடப்படுகிறது
அது மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக 
அமைகிறது .

தன் பகலின் தீர்மானம் ஒவ்வொன்றாக 
நிறைவேற்ற எடுத்து கொண்டுள்ள 
நம்பிக்கை எது வரை நீண்டிருக்கிறது 
என்ற அச்சம் பொய்மையில் சங்கமிக்கிறது .

இப்படிப்பட்ட நீடித்த பகல் நீங்கள் 
வெறுப்பிற்கு உட்படுத்தப்படலாம்
இல்லையெனில் நேசிப்பிற்கு 
உடன்படலாம் .
எதுவாயினும் உங்களின் சாதகம் 
இதற்கு என்றுமே தேவையாய்
இருக்க போவதில்லை .

இந்த நீடித்த என்பதன் அர்த்தம் 
உண்மையிலும் அந்த பகல் அடுத்த 
நிலைக்கு தன்னை எடுத்து 
செல்லவே இல்லை விரும்பவும் இல்லை .
                                                    -தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு