குற்றம்


செயலிழக்க செய்யும் 
குற்றத்தில் என் 
அவ நம்பிக்கை 
இறைந்து கிடக்கிறது .


சொற்களின் குறியீட்டை 
சரிபார்க்க நேரம்
குறைவாகவே 
ஒதுக்கப்படுவதால் 
ஐயம் புக வேட்கையை
தேடுவதில் எனக்கான 
வாய்ப்பு கொட்டி கிடக்கிறது ..


என் ஆற்றுப்படுத்தும் 
ஒரு புன்னகைக்கு 
பல காரணிகளின் 
தொடர்பிருக்கிறது .
                    -தி .ராஜேஷ் .
                               

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு