மீண்டுவிடுதல்


ஈடில்லா ஒரு 
கனமேற்றும்
செயல்பாடு 
உங்களை தழுவி 
சென்றதை  
உணருகிறிர்கள்.

இப்பொழுது 
நீங்கள் உடனே  
செய்யவேண்டியவை 
அந்த கணத்தில் இருந்து 
மீண்டுவிடுவதே ..

அது எப்படிப்பட்டவை 
என்று உங்களுக்கு 
இறுதி வரை 
சொல்லி முடிக்கவில்லை 
கேட்கும் நிலையை 
கடந்து விட்டு 
அதிலே 
பயணப்பட்டுவிட்டர்கள் ..

மீண்டுவிடுதல்
மற்றுமொரு  
செயலாக
உருவாக்கி கொண்டாலும் 
தோன்றலின் இருப்பாய் 
அந்த கனத்தை பற்றியே 
சுற்றியம்மைக்கப்படுகிறது .

நிகழ்ந்த இருப்பிடம் 
செல்வதை காட்டிலும் 
நிகழ்த்துகின்ற பிணைப்பை 
ஏற்கின்றாய் ..

ஒரு பொழுதும் 
தவறின் நிழல் 
இதில் விழாதவாறு 
மீண்டுவிடுவதே 
உண்மையாக்குகிறாய் .

                                 -தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு