தொய்வு


வலிமையின் உள்ளார்ந்த 
தொய்வு இடப்பெயர்ச்சி 
அடைய உங்களின் 
கருத்தோற்றமும்
பிரமிக்கவைக்கலாம் .


மதிக்கப்படும் தீஞ்செயல் 
ஒன்றை இதற்கு மேலும் 
நான் புனிதப்படுத்த 
தேவையில்லை 
அவையாவும் ஏற்கனவே 
விட்டொழியப்பட்ட 
காரணத்தால் இன்றைய 
உங்களின் கேள்விகள் 
தேவையாய் இருக்கவில்லை .


இனிதை வரவேற்கும் 
வழிமுறையில் சான்றை 
செயலிழக்கும் வேலை 
உங்களுக்கானது அல்ல .




                                     தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை