நிர்ணியக்கும் கட்டளை.


தன்னை நிர்ணியக்கும் 
சாத்தியகூறுகள் 
உங்களிடமிருந்து 
பறிக்கும் பொழுது 
அடங்குதல் 
முற்று பெறுகிறது .

தோன்றிடாத 
சிந்தனையின்
சாயல் 
எல்லாவற்றிலும் மீதும் 
பூசப்படுகிறது
நம்பவைக்கவும் 
உறுதி கொடுக்கப்படுகிறது 

இதில் நீங்கள் மட்டுமே 
அனுமதிக்கப்படுவீர்கள்
சுயத்தின் அலறல் 
இப்பொழுது 
நீங்கள் 
கேட்டு விட கூடும் 
அச்சமும் ,தயக்கமும் 
உங்கள் மீது 
தெளிக்கப்படுகிறது ..

வருந்தும் காரணங்கள் 
பறிக்கப்படுகின்றன 
திணிக்கப்பட்ட மகிழ்வை 
எவ்வளவு காலத்திற்கு 
சுமக்க வேண்டியிருக்கும் 
என்ற சந்தேகம் 
மேலோங்குகிறது ..

வழிவகை உண்டென
சுயத்தின் ஒரு 
குரல் கேட்கிறது  
தன் செயல்கள் 
மெய்ப்பிக்கும்மாறு
அதற்கு 
கட்டளை 
பிறப்பிக்கப்பட்டன.
                             தி .ராஜேஷ் . 

  





 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு