கடினம்

இப்பொழுதெல்லாம் 
அதிகமாகவே 
அழுது விடுகிறேன்
உணர்வின்  அதிக 
பலவீனம் 
ஆட்கொள்ள 
எதுவுமே 
செய்ய முடியாமல் 
அழுவதே சிறந்ததாக 
இருப்பதால் அழுவது 
புதினமாகவே 
அமைகிறது  
எனக்கு. 
அவ்வளவு 
துக்ககரமானதல்ல
என் அழுகை 
அன்பின் நிலையை 
அது உரைப்பதாகவே 
எனக்கு காட்டுகிறது ..

ஆயாவின் பிரிவை 
எப்படியெல்லாம் 
மாற்றியமைக்க 
விரும்பினேனோ 
அவை முதல் நிலையிலே 
தங்கி விட்டன 
நான் விரும்பவதும் 
அவையே ..

மகிழ்வுகள் 
எப்பொழுதும் 
சூழ்ந்திருந்தாலும் 
கடினமான 
மன நிலையிலே 
இருப்பதேன் 
நண்பர்களின் 
அக்கறை 
தொலைபேசியில் 
என் அறையை 
தட்டி சொன்னார்கள் ...

கடினம் மிகவும் 
ஆபாயங்கரமான 
சொல்லாகவே 
அவர்களால் அதை
பார்க்கப்பட்டன 
கடினமாக அதை 
உணர தேவை இல்லை 
இதிலாவது 
உதாரணமாக 
இருந்து விட்டு 
போகிறேனே 
என்று சொல்ல தான் 
விரும்பினேன்..
                    - தி .ராஜேஷ் .

Comments

  1. கடினமாக அதை
    உணர தேவை இல்லை
    இதிலாவது
    உதாரணமாக
    இருந்து விட்டு
    போகிறேனே
    என்று சொல்ல தான்
    விரும்பினேன்


    ///////// super nanbaaa
    by
    www.ineeya.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு