தவறுகள்.

என் தவறுகள் 
எங்கும் எப்பொழுதும்
மறைத்து 
வைக்கப்படுவதில்லை 
அது எங்கு எவ்வாறு 
நடந்ததோ அவ்விதமாகவே 
இன்னும் உலவி 
கொண்டு தான் திரிகிறது .

நாளும் வளர்கின்ற 
இவை என் வருகைக்காக 
மீண்டும் 
காத்திருக்கிறது. 

தலைகுனியும் 
குற்றணர்வு இங்கு 
கண்டிப்பாக 
நியாயமாக்கவில்லை.

வழக்கம் போல உன் 
கணமேற்றும் நொடிகளின் 
மவுனம் இது வரை 
அறிந்து வைத்துள்ள  
உறவின் புரிதல் 
மேலும் ஆழப்படுத்துகிறது .

தவறை தவறாகவே 
பார்க்கும் வரையில் 
தவறு நிகழ்ந்துவிடுகிறது 
ஒவ்வொருமுறையும். 

ஒரு தவறு எப்பொழுது 
தவறாகிறது 
தவறாக்கப்படுகிறது
தவறின்மையாக இருக்க 
ஒரு செயல்பாடும் என்னில் 
இதுவரை உருவாக்கப்படவில்லை .

இயன்றவரை 
தவறை 
ஒத்து கொண்டுள்ளேன் 
மன்னிப்பதற்கும் 
என்னிடம் ஒன்றுமில்லை .

என் தவறுக்கு 
நியாயங்கள் 
என்றுமே 
இருந்ததில்லை 
சந்தர்ப்பம் மட்டுமே 
இதில் மேலோங்குகிறது ..

உன் வெறுப்பின் 
நிலையை இப்பொழுது 
நான் உணர தேவையில்லை 
அது இளம் வயதிலே 
உண்டாக்கப்பட்டுவிட்டது .

தவறின் வலியை
விட 
வெறுப்பின் வலிகளை மட்டுமே 
என்னிடம் சேகரிக்க 
வைக்கிறாய் .

நாளை அனைத்தும் 
மாற்றி விட முடியும்
ஆனால் 
இதுவும் தவறாகவே 
உன்னால் கருதக்கூடும் .

தவறின் விளைவு 
வரிசையாக 
பட்டியலிடப்படுகிறது 
ஒவ்வொன்றாக 
மெருகேறுகிறது
ரசித்து கொண்டிருக்கிறேன் 
அதனதன் இயல்பில் .
                           -தி .ராஜேஷ் .
 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு