பொய்மையின் மொழிபெயர்ப்பு

என் எண்ணங்களின் தவிப்புகளை
வரையறை செய்ய இயலாமையில்
என் நிமிடங்கள் தனிமைக்கு
அழைத்து செல்கிறது ...

தோன்றும் மருத்தொன்றலின்
சிந்தனையை வழிப்பறி
செய்கிறது உன் நினைவுகள் ....

மறுக்கும் உண்மையின்
மொழிபெயர்ப்புகளை
பொய்மையை நாடுகிறது ...

நடக்கும் நிகழ்வுகளை
இயல்பாய் ஏற்று கொண்ட
என் மனம் ...

என்றுமே தொடரபோவது
உன் அன்பு நிலையையே ..
                             - தி.ராஜேஷ்

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை