இறுதி செய் .

இன்னும் உருவாகியிராத
ஓர் இருப்பில்
தன் உணர்தலை அண்டமெங்கும்
பரவ செய்கிறாய் .

ஆதியின் ஆக்கங்களை
காலத்தின் வழியே  செலுத்துகிறாய்
முதன் முறையாக
பிரபஞ்ச அன்பை
என் பெரு வெளியில்
விடுவிக்க செய்தாய் .

உன் மகா இயக்கம் இப்பொழுது
எதனை சார்ந்து
இயக்கப்படுகிறது
உன் வெற்றிட இருப்பில்
பிரதி பிரபஞ்சமாக
என்னை உருவாக்கி
கொள்கிறாய் .


உனக்கே உனக்கான
வார்த்தைகளை
வடிவமைகிறாய்.

அனைத்தும்
இறுதி செய் .

வளத்தூர் தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு