பிழையின் தோற்றுவிப்பு






முன் 
தடைச்செய்யப்பட்ட 
காலத்தில் இருந்து 
மவுனங்கள் 
மன ஒலிகளில் 
விழுங்கப்பட்டன .

அதில் ...

பிரபஞ்ச நிழல் 
அசைவுறும் 
கனவின் பிம்பம் 
நான் .

என் பிழையின்
தோற்றுவிப்பு
மற்றுமொரு 
முடிவிலி .

தன் பிரிதிபலிப்பு
பதிவிறக்கம் 
செய்வதற்கானது அல்ல .

என் நிழல் 
கற்பனை செய்யப்பட்ட 
கனவு நிலை .

பின் 
விடுவிக்கப்பட்ட மவுனங்கள் 
ஒவ்வொன்றாக 
தன் சொற்களின் மிகைப்படுதலின் 
அமைவு 
தன் உணர்தலின் 
பெரும் சுய இயக்கங்களை 
பெற்றிருக்கிறது .

-வளத்தூர் தி.ராஜேஷ் 


Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு