முன் இரவின் பொழிவு.


முன் இரவின் பொழிவுகளில் 
நீண்டிருக்கும் இரவுதனை 
எண்ண போர்வைக்குள் 
சுமத்தப்பட்டிருக்கிறது .
சுய சுமையின் கணம் 
நொடிகளின் மீதே 
பயணப்படுகிறது .
காலத்தின் காத்திருப்பை 
நம் நினைவலைகள் 
பொருட்படுத்துவதில்லை .

அதன் வழிகளில் 
தன் கூற்றின் பகை 
வழிந்தோடும் உறவுகளில் 
வளர்கிறது .
நெடுந்தொலைவின் 
வன்மம் படர 
துணையினை 
தேடுகிறது .

தன் அமைவின் 
இழிநிலை 
குற்றம் சுமத்த 
செயல்கள் 
இன்னும் கூடுகிறது .

உணர்த்தி விட்ட 
தொன்மையில் 
அன்று சிந்திய 
பல சுய நீர்மங்கள் 
திரவத்தின் தலைவன் ஆனது .
இன்று தலைவியை 
நீர்மம் சூழ 
மன தொலைவுகள் 
நெருங்குகிறது .

                        -வளத்தூர் தி.ராஜேஷ் 


Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு