பிரபஞ்சமும் என் இயக்கமும்

அமைதியின் ஊடே 
வழிந்து கொண்டிருக்கிறது 
நிறைவு கொண்ட 
என் பிரபஞ்ச எண்ணம் 
அதன் எச்சங்கள் 
தன் குறியீட்டு 
கொண்டு 
விண்மீன்களும் ,நட்சத்திரமும் 
விதைத்து கொண்டிருக்கிறது 
பெருவெளி .

உன் இயங்குதல் கொண்டு 
அறிந்தவர்கள் 
ஒருபோதும் 
உணர்வதில்லை 
என் இயங்குதலின் 
தீவீரத்தன்மை 
எண்ணத்தோன்றலின் 
காட்சியமைப்பு 
மட்டுமே என்று .

ஒப்பீட்டு உணர்த்தப்படுதலில் 
உனக்கும் எனக்கும் 
வேறுப்பாடு இல்லை 
என்னையும், மற்றவையும் 
தாங்கி கொண்டு இயக்குகிறாய் 
நானோ 
உன்னையும் ,மற்றவையும் 
நேசித்து கொண்டு 
இயங்குகிறேன் .

உன் இயங்குதல் 
பெருவெளி 
அறிந்திருக்கிறதோ 
இல்லையோ 
எந்தன் ஒப்பில்லா 
மன பெருவெளியில் 
அனைத்துமாக 
நிறைகிறது அன்பு .

என் இயற்றப்படும் ஒரு 
பிரபஞ்ச நிகழ்வில் 
நீயும் ஒரு 
அங்கமாகிறாய் 
எனதுயிர் 
பிரபஞ்சமே .

           -வளத்தூர் தி  .ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு