தன் தோன்றல் .





தன் சுவாச காற்றின் 
இடப்பெயர்ச்சி 
மற்றவற்றின் 
நம்பகத்தன்மையை 
சோதனையிட 
தன் இயற்கை 
வாய்ப்பு 
வழங்கியிருக்கிறது .

தன் காலம் 
ஓய்ந்து இருப்பதாக 
வாழ்வின் 
திகைப்புகள் 
மேலோங்குகிறது .

தன் தீயை 
கொதிநிலை 
கொண்ட 
மன கண்ணீரின் 
திரவத்தை 
நிர்பந்தங்கள் 
சூழ்ந்துள்ளது .

தன்னை சார்த்து 
வழிந்தோடும் 
அழகியலை 
தன் மாய்க்கும் 
விழிகளை மேலும் 
கூர்மைப்படுத்த 
தன் ஊன் பரிணமிக்கிறது .

தன் 
தன்மைகளை 
தன்னுடையதாக்கியது 
ஒரு 
தன் தோன்றல் .
                            -வளத்தூர் தி.ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு