வார்த்தைகளின் தேடல்.





இது வரையிலும் உன்னிடமும் 
பகிராத வார்த்தைகளை 
எண்ணத்தின் அக இடப்பெயர்ச்சியில் 
தேடி கொண்டிருக்கிறேன் .
அவையை நீ மிகவும் விரும்ப கூடும் 
வெறுக்கவும் கூடும் 
ஏதும் சொல்லாமலும் 
இருந்து விட கூடும் 
உன் எல்லா  நிறைவையும் உண்டாக்க கூடிய 
பூரணத்துவம் வாய்ந்த அவ்வார்த்தையை 
மேலும் தேடி கொண்டிருக்கிறேன் .

உன்னை யாரென்றே  தெரியாது 
ஆனாலும் அவ்வார்த்தையை 
ஓய்வில்லாமல் தேடி கொண்டிருக்கிறேன் 
உன் வருகைக்காக .
மன போராட்டம் எவ்வளவு 
அசாத்தியமானது என்பதை எளிதல் 
உணரவைக்கிறது 
ஒவ்வொரு சுய தேடலிலும் .
உன் முதல் அக மகிழ்வை ,நேசங்களை 
என்னால் நீ பெற வேண்டுமே என்ற 
உன் அன்பினால் கட்டுண்டு 
தேடி கொண்டிருக்கிறேன் 
பல ஒளி ஆண்டுகளை கடந்து .

கற்பனையில் அனைத்தும் சாத்தியம் 
என்றார்கள் ஆனால் அது அப்படி அல்ல 
அவ்வளவு எளிதானதும் அல்ல 
கற்பனைகளை கடந்தும் சிந்திக்கிறேன் 
உனக்காகவே மன விதையில் விதைக்கப்பட்ட 
அவ்வர்த்தையில் உன்னை கரம் பிடிக்க .

கனவில் அவ்வார்த்தைகள்  
இப்பொழுதைக்கு அவசியமில்லை 
என்று உன் கண்ணிமையில் கூறினாய் 
அந்த மொழியை புரிந்த கொள்ளவும் 
அந்த வார்த்தையால் ஈடு செய்ய முடியாது 
என்பதை நீ அறிந்திருக்க மாட்டாய்.
இறுதி வரை நான் கூற வருவதை 
வார்த்தையாகவே நீ கருதவில்லை 
அனைத்தும் நம் வாழ்வாகவே உறுதி செய்தாய் .

அவ்வார்த்தைகளின் தேடல் இனி நாமாவோம் .

                                                                    தி .ராஜேஷ் .


Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு