புன்னகையானது :).







சிறிய வயதில் 
பூத்த புன்னகையை 
அனைத்தும் 
இன்றைய நாட்களில் 
அதிகம் தேடப்படுகின்றன .

இருகும் மனதிற்கு 
ஆறுதல் சொல்லும் 
தன்மைகள் அதில் 
அடங்கி இருப்பதாக 
நம்பிக்கையாக்கப்படுகின்றன .

தேடலின் முறையே 
புன்னகையின் உருவாக்கம் 
அதற்கான தோன்றலின் 
இருப்பிடம் இன்னும் 
இருக்கின்றதா 
என்ற சந்தேகம் 
விதைக்கப்படுகின்றன .

காரணங்கள் 
அவசியமில்லை என்றாலும் 
புன்னகை வீற்றிருக்கும் 
அமைவை 
தெய்வமாக்கப்படலாம்.

எதிர் மறை துயரம் 
தூற்றிக்கொண்டிருக்கிறது  
தன் நன்றி கேட்ட செயலை 
உண்மையை உணர்ந்த பின் 
பேரமைதியை தன் இயல்பாக 
ஏற்று கொண்டிருக்கலாம் .

போலி புன்னகையில் 
புதைந்து போகிறது 
காரணமற்ற சுய எண்ணங்கள் .
இன்றைய அதனின் தேடல் 
சிறு வயது புன்னகையானது :).
                                               -வளத்தூர் தி.ராஜேஷ் .

Comments

  1. "போலி புன்னகையில்
    புதைந்து போகிறது
    காரணமற்ற சுய எண்ணங்கள் .
    இன்றைய அதனின் தேடல்
    சிறு வயது புன்னகை"

    Awesome pa!! Keep writing pa!!

    ReplyDelete
  2. "போலி புன்னகையில்
    புதைந்து போகிறது
    காரணமற்ற சுய எண்ணங்கள் .
    இன்றைய அதனின் தேடல்
    சிறு வயது புன்னகை"

    Awesome pa! Keep writing!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு