கூறுவதற்கில்லை

தனித்து 
விடுகின்ற 
ஒரு 
உறவு 
பல 
புறக்கணிப்பின் 
வடுவாக 
மறைந்தாலும் 
அதன் 
உள்ளுர வலி 
உணர்த்தி கொண்டே 
இருப்பது நினைவின் 
பலமாகிறது ..

பொருள் தேடுவது 
வாழ்வாக 
போதிக்கப்பட்டது 
அப்படிப்பட்ட 
அறிவு எனக்கு 
தேவையாய் 
இருக்கவில்லை ..

உறவில் 
உணர மறுத்த 
நேசங்களும் 
உணர்ந்த அன்பும் 
இல்லாமலே 
ஆகி விட்டன.
உணர்கின்ற 
உறவை தேடுடல்
எது வரை 
வரையறுக்கப்படுகிறதோ ..

தவிக்கின்ற ஆதங்கம் 
முற்றிலுமாக 
அழிக்கப்படவில்லை
தவறவிடுகின்ற 
இறுமாப்பு 
நிலை நிறுத்தி 
கொள்கிறது 
தன் அகந்தையில் .

எஞ்சி இருப்பவை 
எவையென 
கூறுவதற்கில்லை 
அனுமானம் 
மட்டுமே 
செய்யக்கூடியவை .
                             தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை