வலிகளின் புலம்பல்

தெரியாமல் செய்த காயம் 
என்றாலும் ஆழமாக
சென்றது என் மனதில் ...
வலிகளில் நீ வரும் 
வழிகளை எதிர்பார்கிறேன் ...
வராமல் போனாலும் 
பாதகம் இல்லை 
நீ என்னுள் இருப்பதாகவே 
எண்ணி கொள்வேன் ...
வந்து விட்டாலும் 
ஒன்றும் இல்லை 
நீ என்னுள் இருப்பதை 
உறுதி செய்கிறாய் 
உன்வருகையில் ....
எப்படி இருந்தாலும் 
நின் அன்பை பெறுகிறேன்
முழுமையாக ...
காயத்திற்கு மருந்தாக
அமைகிறது உன் சில மவுனம் ....
இல்லையனில் மேலும் 
காயப்படுத்துகிறது
நான் நினைக்கும் 
உன் சில மவுனங்கள் ..
நான் நினைத்தால் மட்டுமே 
நீ வருவதில்லை நீயே
என் மனமாக இருப்பதால் ..
                            -தி.ராஜேஷ்

Comments

Popular posts from this blog

Testing :)