பயணம் இனிதே தொடங்குகிறது

துடிக்கும்  உள்ளத்தில் 
கணமேற்றும் நொடிகளை 
கண்டுவிடில் இன்னும் 
அதிகமாகிறது
எந்தன் அறியாமை ...

நீக்கமற உள்ளதை பரவி 
கொள்வதற்கு முன் 
அறிந்தவை எடுத்து 
சொல்ல துடிக்கிறது உலா...


முன்னோக்கிய என் 
வழிதடங்களில் பின் 
சுமக்கும் நினைவலைகள் 
தாக்கி கொண்டே இருக்கிறது ..


அவைகளை வெறுப்பதற்கு 
ஏதும் தேவைப்படவில்லை 
என் நேசிப்புகளே 
போதுமானது தான்..


மறத்தல் கடுமையான 
பயிற்சியை அளிக்கிறது 
வென்றுவிட முயலும் 
பொழுது சிறுது 
தடுமாற்றம் ஆட்கொள்கிறது 
தொடர்வதும் மேலோங்குகிறது ..


என் நேசங்கள் 
பிரபஞ்சத்தை 
கடந்து விட்டால் 
என்னுள் இல்லாமையே 
நின்று போகும் ..



மகிழ்வின் பிறப்பிடம் 
நோக்கி 
அதுவாகவே என்னை 
நிலைநிறுத்தி கொள்ளும் 
சக்தியை தேடுதலில் 
பயணம் இனிதே 
தொடங்குகிறது ...



                 தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு