நான்
பல ஒளிஆண்டுகளின்
பயணத்தில் சிறிது
நேரம் இளைப்பாறும்
நான் .
எனக்கான சிந்தனைகள்
இதுவரை தோன்றியதாக
பிரபஞ்சத்தை மட்டுமே
நான் கருத வாய்ப்புண்டு ..
அவை இருப்பதாலே
பிரபஞ்சங்களை மீறிய
சிந்தனை செய்ய அவையே
முன் உதாரணமாகிறது
என் எண்ணங்களை
வடிவமைக்கிறேன்
நாளொரு விதமாக
என்னை பொருத்தி
கொள்கின்ற யாவிலும்
மட்டுமல்ல என்
இயலாமையின்
நிலையிலும்
நானாகிறேன் .
தி .ராஜேஷ் .
Comments
Post a Comment