வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

உயிரோசையில் வெளியான கவிதை அன்பின் நன்றி உயிரோசை நண்பர்களுக்கு .

http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6349


ஒன்றிணைக்கும் அன்பில் 

தன் வெளியின் ஓடம்
எத்தனை தொன்மையினை
கடந்து வந்திருக்கிறது
கால நினைவில்
இதனையும்
இணைத்து விடு .
நம் தனித்த
விண்ணை
அத்தனை உயிர்ப்புடன்
நோக்குகிறேன் .
அன்பு
ஒரு பொருட்டல்ல
விண் நிறைக்கும் உணர்தல்
ஒவ்வொரு தனிமையிலும்
வீற்றிருக்கிறது .
விண்ணகி
மேலும் காத்திரு
அகாலம்
தன் வினையை
எப்பொழுதும்
உற்பத்தி செய்துக்கொண்டிருக்கிறது .
ஒன்றிணைக்கும் அன்பில்
மீண்டும்
வந்திணை. 

***
காலத்தின் இறுதியொன்று
கால நுழைவாயில்
தன் நினைவை
அதனதன் வழியாக
உருமாற்றி வைத்திருக்கிறது.
அதில்
புதிர் நிறைந்த ஓர் நினைவை
தேர்ந்தெடுத்தேன் .
என்றோ கைவிடப்பட்ட நினைவு அது
எவ்வித தயக்கமின்றி
அனுமதித்தது அந்நினைவு
அன்றிருந்த காலம்
மீண்டும் உருப்பெறுகிறது .
ஓர் நிமிடம்
கடந்த நிலையில்
வழியெங்கும் நிகழ்கால நினைவு
தன்னை துரத்துகிறது .
மீண்டும் அடையாளமிட்ட
தன் நினைவை
அங்கயே விட்டு வந்தடைந்தேன்
மன்னிப்பாயாக. 

***

தன்னின் மீண்டெழுதல்.
அங்கொன்றும் நிகழ்ந்திருக்கவில்லை
முன் வினை
தன்னையை
கடந்து கொண்டிருந்தது .
யார்க்கும் உள்ள  ஒப்பற்ற வெளி
எஞ்சி உள்ள தன் காலத்தை
கடந்து கொண்டிருந்தது .
ஆதியின் தொடர்ச்சியின் நிகழ்
தன்னை தகவமைத்து விட்டிருப்பவை
நம் அன்பை கொண்டு
எளிதாக கடந்து கொண்டிருந்தது.
கடந்து கொண்டிருப்பவை
பிரபஞ்ச சுழற்சியில்
மீண்டெழும்
.  

***
அகாலத்தின் அழைப்பு.

கால வெளியின் ஓடத்தில்
பேருந்தின் முன் இருக்கையில்
ஓர் வயதுடைய குழந்தை
உயிர் ஊடுருவும் பார்வையை
எங்கள் மீது தொடர்ந்து
செலுத்துகிறது .
அவ்வன்பு
எங்களின் நெகிழ்தல் கொண்டு
அங்கும் இங்குமாக
அகத்தில் முந்துகிறது .
அக்கணம்
அகாலத்திலிருந்து
ஓர் குரல்
எங்களை அழைத்துக்கொண்டிருந்தது 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு