வளத்தூர் தி.ராஜேஷ் கவிதைகள்.

இந்த வாரம் உயிரோசையில் வெளியான கவிதை


http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6184



தன் ஒளி
ஏற்றுக்கொள்ளப்பட்ட இருளில்
இன்னும் எதனை அனுமதிக்கப்படும்.


அடுத்தடுத்த தன் இருப்பை
வழங்கி கொண்டிருக்கும் நிழலில்
தன்  ஒளி கவனச்சிதறலாக
ஆக்கப்படுகிறது .


தொன்மையின் ஒளி
என்னை சேர்வதற்கு உள்ளாகவே
காட்சிப்படுத்தி விடுகிறது
தன் உணர்தலின் இருப்பை .


முன்னிறுத்தும் இருப்பின் நிழல்
பெரு வெளியின்
கனவாய் நகர்கிறது .


குன்றிய இறுமாப்பின் நிழல்
ஆதியின் ஒளியில்
தன் இயல்பை மறைத்து கொண்டு
மேலும் பிரதிபலித்து கொண்டிருக்கிறது .


தன் ஒளியின் விடுவிப்பை
மேலும் அதிகரித்து
கொண்டிருக்கிறாய் .


ஈடற்ற நிழல்
நகர்ந்து கொண்டிருக்கையில்
வழியெங்கும்
தன் பிரதிபலிப்பு தான் .


தன் பகிர்வு எதனை பற்றியதாக
இருந்தாலும் அவைகள்
உன் மையத்தின்
வெளி சிதறல் தான் .


தன் ஒளி அத்தனைக்கும்
அதனதன் நிழலாய் நான் .



---------------------------------------------------------------------------
 பகிர்வின் எல்லை
நாளை வெறொரு இருப்பின் வழியே
அனைத்தும் மாற்றி அமைக்கப்படும்
நிலையிலும்
இங்கு அனுமானத்தின் மீதே உருவாகும்
நம்பிக்கையை ஏற்றுக்கொள்ள
இந்நொடி உதவுகிறது .


ஒப்பிட்டின் அளவை முறையிட்டு
கொண்டிருக்கிறது மவுன அமைவு .

தன் தேடலை சிறிது சிறிதாக
அழைத்து கொண்டிருக்கிறாய்
காலத்தின் வழியெங்கும்
பிரபஞ்ச ஒலி எதிரொலிக்கிறது .


தன் அனைத்து ஒப்புமையின்
தற்பொழுதைய இருப்பு .


அன்றன்றும் சொற்களை நீயே
இணைத்து விடுவாய் என்றே
தன் தோன்றலை மறைத்து கொள்கிறேன்
இருந்தும் அனைத்தும் நீயே அறிவாய் .


கேள் என் ஆதிக்கத்தை
ஒவ்வொன்றாய் இகழ்.
அதன் சிதறல் அனைத்தும்
என் நிழலில் மறைந்து
பின் தொடர்கிறது
விட்டு விடாதே.


தன் மையத்தின் வழியே
கணக்கற்ற நிகழை உறுதி செய்.

ஒன்றின் பகிர்வு
உன் எல்லை எனில்
அதில் உணர்தல்
என் இருப்பு .

 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு