வளத்தூர் தி.ராஜேஷ் கவிதைகள்.

இந்த வார உயிரோசையில் வெளியான கவிதை


http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6166

கூற்றின் நிகழ்
மன நீர்மத்தின் அகழியில்
சுழன்று கொண்டிருக்கிறது
என் நினைவுகள் .


என் பிரிதொரு முகம் அணிந்து
உலவும் பல்நிலை வன்மம்
காத்திருக்கும் இரவில்
ஈடேற்ற  
தன் மனதை
உடைத்தெறிக்கிறது.


இனி
வன்மத்தின் முகம் அணிந்து
எங்கும் திரிய வேண்டியது தான் .


சுய தேடலின் விளைவுகளை
முன்னிலைப்படுத்துகிறது
தன் அறியாமை .


பிரபஞ்ச நகர்வின் இடப்பெயர்வில்
எதை தான் அறுதியிட்டு
கூறி கொண்டிருக்க முடியும் .

நிழல் கனவுகள்

ஒளிர் புகும் வன்மம் நிறைந்த
காலத்தின் நிழல் அச்சமூட்டுகிறது .


தன் நிழல் வெளியிடும் விசையில்
வீழ்ந்து கிடக்கிறது என் ஒளி .


முன் இருப்பின் தொலைவில்
நிகழின் பிம்பம் மேலும் கூச செய்கிறது .


காத்திருப்பின் நிழல் பிம்பம்
ஒருபோதும் நிர்பந்தங்களை
எதிர்கொள்வதில்லை .


என் பகிராத நிழலின் சொற்கள்
காலத்தில் இறைந்து கிடக்கறது .


தன் இரை தேடும் நிழலில்
ஒளி வலி மிகுந்தது .


அன்பின் நன்றி உயிரோசை ,நண்பர்களுக்கு .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு