அசைவுறும் பிரபஞ்ச நிழல்.- உயிரோசை.

இந்த வாரம் உயிரோசையில் வெளியான கவிதை


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6104


தன் உணர்வில் மீண்டும்  
அமர்த்தியது இரவு 
அன்று இட்ட இருள் சூழ .

இருள் தகித்துக் கொண்டிருக்கையில்  

நிழல் மட்டும் மவுனம் கொள்ளும்  
இரவு இது .

கட்டற்ற அமைதி இரவை சூழ
தன்  நிழல் தனித்து விடப்படுகிறது
.

பின் பற்றக்கூடிய நிழலில் அமர்ந்து  

ஒளியின் பிரதிபலிப்பை  
என் கனவின் பிம்பமாக மாற்ற முயல்கிறேன் .

தன் இருண்மையை மலரச் செய்யும் 

 மனமாக வகை புரி .

இயற்றி விட்ட இருப்பு  

தன்னை தகவமைத்துக்கொள்ள  
என் நிழலை இன்னும்  
தேடுதலின் இயக்கமாக  
மாற்றி விட்டிருக்கிறது இவ்விரவு .

தீ ஒளிர ஒளிர வெப்பத்தை நனைக்கும்  

பனி இரவுகள் .

உன் ஒளி தூது செல்ல  

என் இருளே எங்கும் நிறைகிறது.
                          -வளத்தூர் தி .ராஜேஷ்


 அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண்பர்களுக்கு .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை