சென்னையில் நான் -1

சென்னைக்கும் எனக்குமான உறவு எனக்கான முரண்பாடுகளின் தொடக்கமாய் அமைந்தது என் சென்னை பயணம். வீட்டில் இருந்து ஓடி போவது என்று முடிவாகி விட்டது என் உறவினர் தரணி அக்கா திருமணம் திருவள்ளூரில் நடை பெற இருந்தது அதையே களமாக்கி கொண்டேன் .
அத்திருமணத்தில் என் முடிவை என் அண்ணன் கார்த்தியிடம் சொன்னேன் . அவன் படப்பையில் உள்ள  தன்  நண்பன் சரவணனிடம் அழைத்து சென்றான் அங்கு எதையாவது வேலை வாங்கி தரும் படி சொன்னான் அங்கு தற்சமயம் வேலை இல்லை ஒரு வாரம் கடந்து பின் தன் மற்றொரு நண்பனான மணிவண்ணனிடம் அழைத்து சென்று ஒப்படைத்தான். நீலாங்கரையில் என் சென்னை வாழ்வு தொடங்கியது . சென்னையில் வேலை பார்த்த முதல் இடம் முரளி மிசின் வொர்க்ஸ் நீலாங்கரை நகர வசிப்புக்கு  புதியது என்பதால் ஒரு வித மிரட்சியுடனே அனைத்துமே அணுகினேன்.ஒன்றரை வருடம் அங்கயே வேலை பார்த்து கொண்டிருந்தேன் .+ 2  தோல்வி அடைந்திருப்பதால் 500 ரூபாய் சம்பளம் வீட்டிருக்கும் எனக்குமான
கடிதப்போக்குவரத்து மணி ஆர்டர் மட்டுமே .நைட் சிப்ட் இருந்ததால் மாதம் ஆயிரம் பெற்று வந்தேன் .அடுத்த வேலை சேருவதற்குள் மாதம் இரண்டாயிம் பெற்று வந்தேன் உறக்கமற்ற இரவுகளை பிரபஞ்சம் கொண்டு அலங்கரித்து வந்தேன் .
என் அடுத்த வேலை என் உறவினர் சங்கர் அண்ணன் மூலமாக நானும் என் உறவுக்கார நண்பர்களான ரமேஷ் ,பிரகாஷ் ,ஜீவா ,பார்த்திபன் ஆகியோர் மீனம்பாக்கத்தில் சென்னை ஏர்போர்டில் உள்ள அலுவலக கேண்டினில் வேலை பார்த்தோம் . ஏற்கனவே எங்கள் ஊரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்திருப்பதால் வேலை எளிதாகவே இருந்தது .அங்கு சில மாதங்கள் சென்றது .எங்கள் முதலாளி திருநல்வேலி அவருக்கு தமிழ்நாட்டில் பல ஓட்டல்கள் உள்ளன .ஆழ்வார்பேட்டையில் புதியதாக திறக்க இருக்கும் ஓட்டலுக்கு சென்றேன் மற்ற நண்பர்கள் திண்டிவனம் பேருந்து நிலையம் சென்றனர் அங்கு உள்ள அனைத்து கடைகளும் ஏலம் எடுத்து இருந்தார் எங்கள் முதலாளி ராம் பண்ணையார் .நான் சில மாதங்கள் திண்டிவனத்தில் வேலை பார்த்தேன் .ஆழ்வார்ப்பேட்டை சிக்னலில் மேம்பாலம் கிழே இருந்தது குமரன் ஓட்டல் .லைப் ஸ்டைல் பின் புறம் இங்கு சர்வராக சில மாதங்கள் பணிபுரிந்தேன் பின் கேஷியர் ஆக்கப்பட்டேன் .தினமும் மற்றவர்களின் பணம் கைகளில் தவழ்ந்தது .
இரண்டு ஆண்டுகள் இங்கேயே பணிப்புரிந்தேன் .பின் அண்ணன் பணிபுரியும் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தேன் lub dub  மெடிக்கல் மயிலாப்பூர் yellow  pages  ஸ்டாப்பில் அப்போது அமைந்திருந்தது factory  மேடவாக்கத்தில் உள்ள
சித்தாலப்பாக்கத்தில் அமைந்திருந்தது தினமும் 15 M  பேருந்தில் பயணம் .பிறகு ஆபிஸ் வண்ணான்துறைக்கு மாற்றல் ஆனது .-நினைவுகள் தொடரும்

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு