Skip to main content
நீயும் நானுமாக
என் தீயதனை
வென்றிட
உன் வன்மம் கொள்கின்ற
நினைவுகள் தேவையாய்
இருக்கவில்லை .
வெளியேற்றப்படும்
என் அக உணர்வை
உன் இயல்பாக
தொற்றிக்கொள்கிறது
சிறிதும் வெட்கமின்றி .
அதன் அச்சத்தின்
விளைவை
உன் பொய்மையில்
வேருன்றப்படுகிறது .
சிதறிய உண்மைகள்
ஒவ்வொன்றிலும்
நீயும் நானுமாக
பிம்மப்படுத்தலாம்.
- வளத்தூர் தி .ராஜேஷ்
Comments
Post a Comment