அண்ணன் தி .கார்த்தி



சிறுவயது முதலே ஒவ்வொரு வருடமும் இன்றைய நாளை புத்துணர்ச்சியாக மகிழ்வின் உச்சமாக இருப்பதாக நம்புகிறேன் இன்றும் அப்படியே .
என் அன்பு அண்ணன் தி .கார்த்தி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உன் அனைத்து எண்ணங்களும் வெற்றி பெற வாழ்த்துகள் .

நம் வீட்டின் முதல்
மகிழ்வை எங்கும் 
நிரப்பிய தடம் 
எங்கும் உள்ளது .
இன்றும் நிரம்புகிறது 
வருகின்ற அன்பும் 
இதையே நிரூபிக்க 
உள்ளதால் நீயொரு 
வழிகாட்டும் விருட்சம்.

பல தடைகளை 
தாண்டி நீ கல்வி பயில 
அறிவின் பரிணாமம் 
விரிவடைய ஆயாவின் 
நேசமும் வாழ்த்தும் 
முதலாக என்றுமே 
இருக்கும் .

நானும் தம்பியும் 
அண்ணாவென்று 
உன் எதிரில் இது வரை 
அழைத்ததில்லை 
அதற்கான எண்ணமும் 
தோன்றியதில்லை 
அன்பினை என்ன பெயரிட்டு 
எப்படி அழைத்தால் தான் என்ன?
நாம் மூவருமே அவ்வாறே 
வளர்ந்தோம் .

நம்மின் பிணைப்பை 
அன்றைய சிறுவயதின் 
வாழ்விலே நின்று விட்டதாக 
வாலிப வயதில் தோன்ற 
அவ்வபொழுது மாயத்தோற்றம் 
என்னை ஆட்கொள்ளும் 
அவை வெறும் என் 
முரண்பாட்டின் எச்சங்கள் 
மட்டுமே.

நம்மின் சிறு வயது விவாதங்கள் 
விளையாட்டுகள் சண்டைகள் 
மகிழ்வுகள் ஒரே ஒற்றுமையுள்ள 
உடை மட்டுமல்ல எண்ணங்களும் 
இன்றும் நம்மிடம் இருப்பதாக 
அண்ணியின் வருகையில் 
என் அகமெங்கும் நம்பிக்கையின் 
விருப்பங்களாக நகர்கிறது 
காலங்கள்.


என் தவறுகளை உன்னுடையதாக 
மாற்ற நிகழும் பொழுது அதையே
என் கனவில் பொய்மையாக 
சில காலம் வளர்த்து வந்தேன் 
அதனால் ஏற்பட்ட இடைவெளி 
முரண்பாடு இன்னும் என் வடுக்களை
பதம் பார்த்து கொண்டிருக்கிறது .

உன் வழிகாட்டுதலில் 
நம்மின் குடும்பம் பல 
முன் உதாரணங்களை 
கொண்டுள்ளது 
என் மீது பல கோபங்கள் 
இருந்தாலும் அவை என் மீது 
உள்ள அன்பால் மட்டுமே 
இருக்க முடியும் .

உந்தன் எண்ணத்தின் 
ஆற்றலை சிறு வயதின் 
முதலே கண்டுள்ளதால் 
நான் உந்தன் பிரதியாகவே 
தோன்றுவது உண்டு .

நம் ஆயா சொல்லி சென்ற 
என் கடமையில் சிறிது 
கூட நான் செய்ய 
முயற்சிக்கவில்லை என்பதை 
என் மீது இருக்கின்ற 
உன் கோபத்திலும் 
முரண்பாட்டிலும்
மவுனத்திலும் 
உணர்ந்து கொண்டே 
இருக்கிறேன்.

ஆதியின் கோபங்கள் 
ஒவ்வொன்றாக
களைவதை என் 
செயலில் 
உணர்கிறேன் .

என்றைக்குமே 
ஒன்றிணைக்கும் அன்பில் 
நீயும் அண்ணியும் 
மகிழ்வாக இருக்க 
வாழ்த்தும் உன் தம்பி 
                        -தி .ராஜேஷ் .




 


Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை