அப்பாவிற்கான கடிதங்கள்


அலையின் நினைவுகளாய் இன்றும் கனவில் கடந்த காலத்தில் பயணிக்க வேண்டியிருந்தது இன்று கடிதமே முக்கிய நிகழ்வுகளாக இருந்து அதற்கான அறிகுறியாய் சில நாட்களாக கடிதங்கள்  பற்றிய கனவு முன்னறிவிப்பு இன்றி தோன்றியது அதன் சிந்தனையில் தோன்றியது எனக்கும் கடிதத்திற்கும் ஒரே தொடர்பு என் கிறுக்கலான எழுத்துக்களே அப்படிப்பட்ட கையெழுத்துக்கா கனவு வருகிறது இல்லையேல் தவறாக எதையாவது எழுதி அழித்ததை திரும்பவும் எழுத சொல்கிறதா எதை அறிவிக்க கடிதங்கள் கனவில் வந்தன குழப்பத்தில் கனவில் 
இறுதியில் 
எழுந்து விட்டேன் இன்றும் தூங்கா இரவு போல என்று யோசிக்கையில் அப்பாவிற்காக நாங்கள் எழுதிய கடிதங்கள் முன்னிலையாக வந்தது எப்படி இதை இத்தனை நாட்கள் மறந்து போனேன் என் மீது வெறுப்பு பரவுவதை உணர்ந்தேன் ,அப்பா ஊரில் முதலில் மளிகை கடை வைத்திருந்தார் .ஆயா ,அப்பா ,அம்மா ,அண்ணன் ,நான் ,தம்பி என அப்பொழுது எல்லாம்  மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது எங்கள் வாழ்வும் மகிழ்வும் .இன்றும் நினைவிருக்கிறது அப்பா எங்களுக்கு பல் விளக்குவது எப்படி என்று கூறியது வீட்டின் பின் புறம் பொலக்கடியில் நீண்டிருக்கும் கருங்களில் உட்கார வைத்து சொல்லி கொடுக்கும் விதம் அதை நாங்கள் மறந்து இருந்தாலும்  இன்றும் நாங்கள் பல் விளக்கும் பொழுது அப்பாவின் நினைவில் அவை எப்பொழுதும்  இணைந்து இருக்கும் .இப்பொழுது நினைவு வேறு பக்கம் இழுத்து சென்றது அப்பா முதன் முதலாக  கடிகாரத்தில் மணி பார்க்க சொல்லி கொடுத்தது எப்படி என நினைவு வந்தன எனக்கு சரியாக மணி பார்க்கவே தெரியாது அவரின் மடியில் உட்கார வைத்து எச் ம் டி வாட்சை காட்டி சிறிய முள் பெரிய முள் எங்கு இருக்கிறது என்று கேட்டு மணி எப்படி பார்க்க வேண்டும் சொல்லியது நினைவிற்கு வந்தது இப்பொழுது மணி பார்க்க வேண்டும் போல இருந்தது மணி இரவு மூன்று மணி என்னை அறியாமலே சிரித்தேன் .இப்படி  ஒவ்வொன்றாக  அவரின் விளக்கங்கள் மனதில் ஆழமாக பதிந்தன .. 
அன்றைய நாட்களில் நாங்கள் மூவரும் சாப்பிட்டு பள்ளி புறப்படும் முன் அப்பாவின் கடைக்கு செல்வது வழக்கம். கடையில் வேலை செய்யும்  குட்டான் அண்ணன் கடைக்கு சைக்களில் கூட்டி செல்வார் அப்பாவிற்கு டிபன் கொடுத்து விட்டு பிறகு ஆளுக்கு ஐந்து காசு கொடுத்து விட்டு கன்னத்தில் முத்தம் கொடுப்பார் ..இன்று இவை  இரண்டுமே கிடைப்பதில்லை.நாங்கள் பள்ளி விட்ட பிறகு கிளிமூக்கு பாய் கடையில் ஐந்து காசுக்கு தேவையான பொம்மை வாங்குவோம் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட பொம்மை கார் ,வண்டி ,வீடு இப்படி நிறைய பொருள் வாங்குவோம் அதை எங்கள் வீட்டு திண்ணையில் வைத்து விளையாடுவோம் இரவு தூங்கும் நேரத்தில் கூட விளையாட்டை  தோடர்வோம் போர்வையை முழுவதும் போர்த்தி விட்டு காலை மடக்கி வைத்து அதில் உள்ள இடைவெளியில் பொம்மை விளையாட்டை ஆரம்பிப்போம் அது தனி உலகமாகவே தோன்றியது .அப்பா நூலகத்தில் இருந்து வாங்கி வந்த சாண்டியலின் புத்தகத்தை படித்து கொண்டிருப்பார் நாங்கள் மூவரும் தொந்தரவு செய்வோம் அப்பா கட்டிலில் ஏறி யார் அதிக தூரம் தாண்டுவது என போட்டி தினமும் எங்களுக்குள் நடக்கும் .இப்பொழுது சரியாக நினைவில்லை யார் அதிகம் வென்றது என்று மூவருமே ஒவ்வொரு முறையாவது வென்றிருப்போம் .இது முடிந்த பிறகு தலையணை விளையாட்டு நடக்கும் ஒவ்வொருத்தர் மீது தலையணை வீசி விளையாடுவோம் பிறகு ஓய்ந்து தூக்கம் வர படுக்கும் பொழுது அப்பா டேப்ரிகாடு பாட்டு போடுவார் விடியும் வரை இனிமையான பாடல்கள் ஒலித்து கொண்டே இருக்கும் ..இப்பொழுது எனக்கும் தூக்கம் வருவதால் நாளை தொடர்கிறேன் .

   

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு