அன்பின் தருணம்

வருடும் மெல்லிய 
காற்றின் அசைவு 
உன்னை நினைவாக்கி 
கொள்ள 
இன்றும் உன்னை 
காணமல் 
உணரமட்டுமே 
செய்கிறேன் ..

இன்றைய நாளை 
என்னை போல 
நீயும் 
கடந்து இருப்பாயா
அதில் நானும் 
உன்னுடன் 
பயணித்தேனோ..

நமக்குள் 
அறிமுகம் 
இல்லையென்றாலும்
யாரென்று 
தெரியாமல் 
இருந்தாலும் 
உணர்கிறேன் 
உன்னை முழுமையாக ..

கடந்ததை நிகழாமல்  
இருக்கவே அன்பை 
பெறுவதற்கும் 
வழங்குவதற்கும் 
பகிர்வு 
சேமிக்கப்படுகிறது.

நம் 
வாழ்வை
எப்படியெல்லாம் 
அமைக்க கற்பனைகள் 
கணக்கில்லா நிலையை 
எப்பொழுதோ 
அடைந்து விட்டன.

நீ சேர்த்து வைத்த
நினைவுக்கும் 
நிகழ்வை 
எற்ப்படுத்துவோம் 
நம் அன்பை.

வருகின்ற நிலையை 
சொல்லாமலே 
என்னுள் கலந்துவிடு 
காத்திருப்பிற்கு நீ 
தரும் நினைவு 
பொக்கிஷமாகவே
நிலைத்திருக்கும் 
நம் நேசங்களில் .
                - தி .ராஜேஷ் .
 


 

 



Comments