அதிர்வு

ஒரு 
அதிர்வு 
உங்களுக்கு 
சொல்லப்படுகிறது .

மிகவும் 
அருகில் 
இருப்பதாக 
மீண்டும் 
சொல்லப்படுகிறது. 

நீங்கள் அதை
இன்னும் 
உணரவில்லை .

சொல்லிய விதம்
தவறாக இருக்கலாம்
இல்லையெனில்
அது   
அவ்வளவு முக்கியமில்லை 
என கருதுகிறிர்கள்.

மீண்டும் எச்சரிக்கையாக 
சொல்லப்படுகிறது 
அதிர்வின் தாக்கம் 
உங்களை 
ஆட்கொள்ள துடிக்கிறதை
உணருகிறிர்கள்.

இப்பபொழுது என்ன 
செய்ய வேண்டுமென 
உங்களுக்கு 
போதிக்கப்பட்டது 
அதை எதிர் கொள்ளவே 
ஆயுத்தமாகுகிறாய்..

அதிர்வலை ஏன்
என்னை தேர்வு 
செய்தது என்று
இப்பொழுது  
குழப்பமில்லை ..

அதிர்வின்  
மற்றொரு 
எதிர் திசையில் 
பயணிக்கும் 
எதிரலையின் 
தாக்கமே நான் .
                  -தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

Testing :)