அழிவின் சுழற்சியில்

நேசங்களின் மொழியினை 
தேடுகிறேன் என் அகத்தில் 
தவறிலந்த வருடத்தில் 
காண்கின்ற யாவும் 
வலிகளை சுமந்து 
நிற்கும் பொதி சுமையில் 
குன்றுபோல் நிலைக்கிறது 
நான் காணும் சுயம் ...

இடப்பெயர்ச்சி செய்கின்ற 
என் வலிகளில் அங்குமொன்று
இங்குமொன்றுமாய் 
பரவி காண்கிறது 
என் மடிப்பு மலைகள் ...

இமயத்தை விட 
உயர்வானது இவை 
யாரும் அறியாதது கூட 
என் சுயத்தின் மீது 
கம்பீரமாய் அமர்ந்து 
நிற்கிறது வலிகள்...


தோன்றியது எல்லாம் 
வடுவாக என்னை 
நினைவின் அகழியில் 
பிடித்து தள்ளபோகும்
பெர்முடா முக்கோணமாகிறது ..

அழிவின் சுழற்சியில் 
காணப்போகும் வசந்தத்தை 
தேடுகிறேன் என் அகத்தில் 
அவ்வழியை அடையும் 
பொழுது பிரபஞ்சத்தில் 
குவாசராக ஒளிர்வேன் ...
                          தி .ராஜேஷ் 

 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை