மெய் தீண்டும் மை விழியே







மெய் தீண்டும் மை விழியே
உயிர் ஊடுருவும் தன்மையை 
கொண்டு எங்குமே நேசிப்பில் 
நிலைகொண்டு உள்ளாய்..

வரையறையின்றி
பொழியும் உன் வசந்தத்தை 
தவறவிட்ட காலங்களை 
மீண்டும் நிலைக்குமென 
காத்திருக்கிறேன் ..

விலகிய பருவம் 
கொண்டு மீண்டும் 
உயிர்ப்புடன் இருக்க 
புதிய மரபினை 
எதிர் நோக்குகிறேன்..

என்றாயிலும் தவறவிட்ட 
நோக்கத்திற்கு மறுக்கும் 
விதமாக அமைதியை 
சூடிகொள்வாய் உன் 
விழிகளில் ..

மெய் தீண்டும் பார்வையை 
மெய்ப்பிக்கும் காலத்தில்  
ஒன்றிணைக்கும் அன்பில் 
நான் கரைந்து போவது 
நிச்சயம்..

அவ்வழியை முன்மொழிக்கும்
இயல்பினை கொண்டு 
தேடுகிறேன் உன்னை 
மெய் தீண்டும் மை விழியே
எங்கோ நிலை கொண்டு 
உன் ஆளுமையின் 
முழுமைக்கும் நான் 
உதாரணமாகுகிறேன்..

இருத்தலின் இருப்பை 
பற்றிக்கொண்டு உன் 
உயிராகுவேன் 
மெய் தீண்டும் 
மை  விழியே நீ எங்கே ...

முடிவினை பெற்றோர் 
இடத்தில் விட்டு விட்டு 
நேசிப்பை நெஞ்சில் 
பூக்க வைத்துள்ளேன் 
யாவும் உன்னை 
சேரவேண்டுமென ...

மெய் தீண்டும் மைவிழியே 
உன் கருவிழியில் 
விழத்தான் காத்திருக்கிறேன் 
என் நேசங்கள் முழுவதும்
நேசிப்பாயாக..

எந்நிலை கொண்டு 
எதிர்ப்பார்க்கும் யாவும் 
உனக்கும் உண்டென 
அறிவேன் அதை 
உறுதி  செய்ய 
உன் மெய் தீண்டும் 
மை விழியாக 
நானும் இருப்பேன் 
நம் முடிவுறா அன்பில் .....

                              தி .ராஜேஷ் .




Comments

  1. மனம் நேசிப்பது எதுவாயினும் அது அதைவிடவும் மிளிர்வதை ஆழ்ந்திருக்கு. அந்த ஆழ்ந்த நிலையே காதல். அது தன்னைவிடவும் தானே தனி சிறப்பென எண்ணம்கொள்ளும்

    அன்புடன் ராஜ்குமார்.
    http://namatchivaya.blogspot.com/2010/12/blog-post_17.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு