சிற் சில கனவுகளின் கானல்-உயிரோசை
இந்த வாரம் உயிரோசையில் வெளியான கவிதை
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6034
அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண்பர்களுக்கு .
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6034
தன் இருண்மையின் அகழியில்
பயணம் செய்கிறது சுயம் .பெருவெளியெங்கும் தன் மவுனத்தை
தூது அனுப்பி கொண்டிருக்கிறேன்
அவை ஆதியின் முதல் மவுனத்தில் சரண் புகும் .
எதையும் உடைத்தெறிக்கும் முன்
என் அடக்கமுறையின் மவுனத்தின் கணம்
எதையும் செய்து விட கூடும்
கூடுதல் எச்சரிக்கை தேவைப்படுகிறது
பிறிதொரு மவுனத்தில் .
அண்டமெங்கும் சரிய
அதன் விளிம்பில் தொற்றிக்கொண்டிருக்கும்
தன் வினையை சான்றாக்குகிறேன்.
என் தயக்கத்திற்கு என்று
ஓர் மவுனத்தை அணிந்து கொண்டிருக்கிறேன்
அதில் எப்பொழுதும் உன் பிரதிபலிப்பே காணுகிறேன் .ஐம்புலன்களும் நிர்ணியம் செய்து கொண்டிருக்கும்
காலத்தில் இருந்து விலகி இன்னும் பிற சாத்தியங்களை
கொண்டு உருவாக்கப்படும் இருப்பை
அகத்தில் வழிபட்டு கொண்டிருக்கிறேன் .
நிழலற்ற ஒளி எங்கும் பரவ
மெல்லியதொரு மவுனம் இரவாகிறது .
இதோ பொழிகின்ற தூறலின் தொன்மை
எந்த காலத்தின் நினைவுகள் .
பிரபஞ்ச துருவங்கள் தொடர்ந்து சலனபடுத்த
மித மிஞ்சிய உணர்தலை என்ன செய்வது

பல அடுக்குகள் உள்ள உன் உருவகத்தில்
எதனை பற்றியது என் வழங்கல்.
என் வெற்றிட சொற்களில்
இல்லாமையின் இருப்பின் உணர்தல்
நிறைவு செய்து வண்ணம் இருக்கிறது மனம் .
--------------------------------------------------------------------------------
நேற்றைய கனவுகளில் மேற்கொண்டு
பேச இன்றைய விடியலும் நீள்கிறது .எப்பொழுதும் உன் சூடிய பார்வையில்
கரைந்து விடும் நான்
சில காலங்களை
உனக்காகவே விட்டு வைத்திருகிறாய்.
என் பேச்சுக்களில் அத்தனை இயல்பு தன்மை
இருப்பதில்லை
இருந்தும் நீ கேட்டு கொண்டே இருக்கிறாய்
தன் முனைதலின் ஒலி
உன் வழியாகவே பிரபஞ்சத்தை எட்டுகிறது .
இதன் முறையாக பிற காலங்களை
ஆங்காங்கே தூவி வருகையில் என் நிலை ?அதில் என் வெட்கத்தையும் மையிட்டு காண் எனக்கென்று உள்ள உணர்தலில் நாம் .
எதனை பற்றியது என் வழங்கல்.
என் வெற்றிட சொற்களில்
இல்லாமையின் இருப்பின் உணர்தல்
நிறைவு செய்து வண்ணம் இருக்கிறது மனம் .
------------------------------
நேற்றைய கனவுகளில் மேற்கொண்டு
பேச இன்றைய விடியலும் நீள்கிறது .எப்பொழுதும் உன் சூடிய பார்வையில்
கரைந்து விடும் நான்
சில காலங்களை
உனக்காகவே விட்டு வைத்திருகிறாய்.
என் பேச்சுக்களில் அத்தனை இயல்பு தன்மை
இருப்பதில்லை
இருந்தும் நீ கேட்டு கொண்டே இருக்கிறாய்
தன் முனைதலின் ஒலி
உன் வழியாகவே பிரபஞ்சத்தை எட்டுகிறது .
இதன் முறையாக பிற காலங்களை
ஆங்காங்கே தூவி வருகையில் என் நிலை ?அதில் என் வெட்கத்தையும் மையிட்டு காண் எனக்கென்று உள்ள உணர்தலில் நாம் .
அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண்பர்களுக்கு .
Comments
Post a Comment