தனிமை

இப்பொழுதைய இந்த தனிமை நிமிடங்களை எச்சரிக்கை மிகுந்த தருணமாக மாற்றியமைக்கிறது காலம் . தனித்திருப்பது ஒன்றும் அபாயகரமானது அல்ல அதன் சிந்தனை முறையை அதனதன் முறையே நிகழ செய்யும் ஒன்றை எப்பொழுதும் செய்யவிட்டதில்லை காலம் . சுயங்கள் பின்னப்பட்டிருக்கும் முடிச்சுகளை தனிமையின் ஏதோ ஒரு நொடிகளும் அதன் காலமும் விடுவிக்க காத்திருக்கிறது . நொடிகளின் இடப்பெயர்வு நினைவலைகளை சிதறடிக்கிறது . அதன் பிம்பங்கள் அச்சம் தரும் விதமாக சிரிக்கிறது . தனிமை அதன் மவுனத்தின் உட்புகுதலில் கூக்குரலிடுகிறது . காற்றின் இடப்பெயர்ச்சிக்கு இங்கு வேலையில்லை . -வளத்தூர் தி .ராஜேஷ் .