மன ஒலியின் ஓலம்-உயிரோசை
இந்த வாரம் உயிரோசையில் வெளியான கவிதை ஓர் உணர்தலை அனைத்து விதமாகப் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறேன் உருமாற்றங்களின் கற்பனையை உடைத்தெறிக்க சிற்சில கணங்களின் காலம் இது . உருவாகியிராத திசையின் தென்றல் தீண்ட உருவாகிறது என் மனதின் அசைவுகள் . பிரபஞ்ச துருவங்கள் தொடர்ந்து சலனப்படுத்த மித மிஞ்சிய உணர்தலை என்ன செய்வது. என் இல்லாமையின் இருப்பை எவ்விதமாக்க் கொண்டாலும் அவைகள் கற்பனையன்று மீதங்களின் மனப் பகிர்வு . எதையாவது எதிர் கொள்ள அனைத்தும் இருக்கிறது ஏற்றுக்கொள்ள சிறிது தான் எஞ்சி இருக்கிறது. நிகழும் சொற்கள் யாதெனில் ஒன்றுமில்லாமல் இருப்பது . அதில் உணர்தல் என் இருப்பின் பெருவெளி . எவ்வித தொடர்பும் இன்றி இயற்றப்படும் இவைகள் ஆதியின் சலனத்தின் ஓர் நினைவுகளின் சான்றுகள் . என் வார்த்தைகளை இணைத்துக்கொள்ளுங்கள் இல்லையெனில் விட்டு விடுங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் மன ஒலியின் ஓலம் பிரபஞ்சத்தின் இருப்பு . முற்றும் தொலைந்த ஒன்று என் இயலாமையுடன் தொற்றிக்கொண்டிருக்கிறது. உன் அனுமானத்தின் முன்பே நிகழ்ந்து விடக் கூடியது என் நொடிகள். முறையொன்றும் ...