சேதமாக்கியது

இரவின் மன அலறல் மவுனத்தை சேதமாக்கியது . கடக்கின்ற கனமேற்றும் நொடிகள் வெறுமையாக இறைந்து இருக்கிறது என் வெற்றிடத்தில் . தோன்றியறியாத தனிமை அமைதியை குலைக்கும் விதமாகவே கண்ணிர் துளியான நிகழ்வு நடைபெறுகிறது அப்பழுக்கற்ற அமைதி மேலும் சூடி கொள்கிறது இந்த இரவின் மனம் . இதன் மைய நோக்கு விசை குறிக்கப்படுகிறது விலகிய கோணம் விரைவிலே மாற்றியமைக்கப்படலாம். இரவில் அகற்றப்படும் புன்னகை வன்மம் கொண்டே ஒப்பிடப்படுகிறது சிதறிய சிறு ஒளியில் இரவு தன் போர்வையை போர்த்தி கொண்டது இனி செய்ய வேண்டியது இந்த இரவை கடந்தாக வேண்டும் என்பதே . - தி .ராஜேஷ் .