புரிதலின் பிழையா ?
தன் முனைப்பின் ஆளுமையில் பொழிந்த என் வசந்தமான எண்ணங்களினால் அலங்கரிக்கின்றன என் பக்கங்கள் . நம்பிக்கையின் விருப்பங்களாக நகர்கின்றன காலங்கள். எதிர் கொள்ளும் முரண்களில் வாய்புகளின் தேடலாக சவால்கள் காத்திருக்கிறது சாதனைகள் படைக்க.. ------------------------------------------------------------- என் அச்சங்களை கண்டறிந்து விட்டு ஏளனம் செய்வது வாடிக்கையாகி விட்டது என் முயற்சிகளுக்கு ... இருந்தும் தொடர்கிறேன் தோல்விகளின்பாதைகள் வழியெங்கும் வெற்றியின் ஆரவாரம் கேட்கிறது ... பெறப்போகும் உயர்வுகள் என்னை சிறுமைப்படுதாமல் நான் பெற்ற தோல்விகள் தாங்கி கொள்ளும் .. ------------------------------------------------------------------- வாய்ப்புகளில் சூழப்பட்ட முடிவுகளாய் திணறி கொண்டிருக்கிறேன் .. எது முடிவு செய்ய வேண்டுமோ அது நிகழ்ந்து கொண்டிருகிறது என் சம்மதம் இல்லாமல் ... எதுவும் இன்பமாக மாற்ற தெரிந்த அன்பிற்கு ...