வாழ்வியலின் கவன சிதறல் .
விதைத்து விட்டிருக்கும் வாழ்வியலின் கவன சிதறல் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது . மூன்றாம் வயதின் நினைவின் மீது இக்கணம் அமர்ந்திருக்கிறேன் . அப்பா மளிகை கடை கொண்டிருந்த காலம் தினமும் முத்தங்களும் ஐந்து காசும் ,பத்து காசும் கிடைத்திருந்தது உணர்த்தி செல்லும் நினைவுகளும் அறிவதற்கில்லை நாங்கள் பெற்றிருந்த அகமகிழ்வை. பின் காலத்தின் பயணம் தொடங்கியது அனைத்தும் நின்றது . வேறு வகையின் பயணம் இனிதே தொடங்கியது . குத்தகை நிலமொன்று இருந்த காலம் அப்பாவின் வண்டியும் தான் . மூவரையும் அதிகாலையில் அழைத்து செல்வதில் இன்பகாற்றை இன்னும் உயிர்ப்புடன் சேகரித்து வைத்திருக்கிறேன் . காலம் தன் பயணத்தை மீண்டும் புதிய விதமாக இயக்கியது . குத்தகை நிலம் கை விட்டு போனது உழைப்பின் நிழல் மெல்ல படருகிறது எங்கள் மூவரின் மீதும் ஒரே புகலிடம்...