பிறகு

தேடல் வழியில் என் கனவினை காண்பதற்கு பிரபஞ்சம் தோன்றா நிலையில் அதன் வெற்றிடத்தில் இல்லாமையின் இருப்பை உணர்த்தி கொண்டிருக்கும் சுய திறவுக்கோல் இன்னுமும் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது . நிறுத்தம். ஒரு இடைவெளியாக என்னால் குறிக்கப்பட்டு முடிவிலியாக இன்று மாறும் வினையினை பின் எதிர்காலத்தின் ஒரு நிகழ்காலம் தன் இயங்குதலை மேலும் தொன்மையாகும் . பிறகு சொல்லப்பட்டவை இன்னுமும் முடிக்கப்படவில்லை . நிகழ்வின் அதிர்வுகள் உணர்த்துவதற்கு என்று ஒரு பிரபஞ்ச இயக்கத்தை நினைப்பதற்கு இந்த நொடியின் பிறகு அவை என்னுடையதாக மாறும் காலத்தில் நான் இருக்கபோவதில்லை . -வளத்தூர் தி.ராஜேஷ் .