தனித்துவம் .

தோன்றிடாத தொன்மையை கொண்டு விடுவிக்கப்பட ஒளிக்கதிர் ஒன்றினை மெல்ல மெல்ல காட்சிப்படுத்துகிறது என்னை . நேற்றைய இன்றைய நாளைய தீர்மானத்திற்கான கட்டமைப்பில் இதுவரையிலும் இன்னுமும் புறப்பட்டிருக்கவில்லை எந்தன் காலமும் அதன் வெளியும் . இயக்கங்களின் வெற்றிட நிறைவு தன் எல்லைகளை சரிபார்த்து கொள்கிறது ஒவ்வொரு முறையிலும் எந்தன் இயற்கையை பரிசோதிக்க. அணுக்களின் தோன்றல் இப்பொழுது சாத்தியமானது என்னில் .அதன் ரகசியங்களை அதனுள்ளே நிரப்பி கொண்டு பரிணாமத்தின் வழித்தடங்களை உருவாக்கி கொண்டது எனக்கான முதல் அணு . பெருவெளி என்னை இயக்கமாக்கி விட்டன தனித்துவங்களில் இனி நானும் ஒருவன் . -வளத்தூர் தி.ராஜேஷ்